நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியூதீனை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் விரைவு..!
நாடளுமன்ற உறுபிப்பினர் றிஷாட் பதியூதீனை கைது செய்வதற்கு 6 பொலிஸ் குழுக்கள் அனுப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச பேருந்துகளில் இடம்பெயர்ந்த மக்களை அழைத்து சென்று பொது நிதிகளை குற்றவியல் முறையில் பயன்படுத்தியமை
மற்றும் தேர்தல் விதிகளை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் றிஷாட் பதியூதீனை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணித்திருந்தார்.
இந்நிலையில் அவரை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் மன்னார் மற்றும் கொழும்பில் உள்ள றிஷாட் பதியூதீனின் இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.