மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டது..! இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு..
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் மாவட்டத்தின் சில பகுதிகளை தற்காலிக முடக்கத்திற்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.
இதன்படி மன்னார் மாவட்டத்தின் பொியகடை, பட்டித்தோட்டம் ஆகிய பகுதிளே இவ்வாறு தற்காலிகமாக முடக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி கூறியிருக்கின்றார்.