SuperTopAds

மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கற்றல் செயற்பாடுகளிலிருந்து இடைவிலக்கும்வரை விரிவுரைகள் நடக்காது..! யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர்கள் தீர்மானம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழகத்தில் நேற்றய தினம் மோதலில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்வரையில் யாழ்.பல்கலைகழகத்தில் விரிவுரைகள் எவையும் நடைபெறாது. என கலைப்பீட பீடாதிபதி கருணாகரன் சுதாகர் கூறியுள்ளார். 

நேற்று மாலை இடம்பெற்ற மோதல் நிலமை தொடர்பாக இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

நேற்றைய தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பில் முடிவடைந்தது குறித்த கைகலப்பினண தடுப்பதற்காக சென்றிருந்த யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் விரிவுரையாளர்கள் மீது மாணவர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் 

அவர்கள் மீது அவதூறான பொய்யான செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளமை மனவருத்தத்தைத் தருகின்றது குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக நேற்றைய தினம் குறித்த முரண்பாட்டினை தீர்ப்பதற்காக துணைவேந்தர் மற்றும் விரிவுரையாளர்கள் சென்றுள்ளனர். 

அங்கு சென்ற எமது விரிவுரையாளர் ஒருவரை மாணவர்கள் தாக்கி இருந்தார்கள் அவர் வைத்தியசாலையில் நேற்றைய தினம் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் இவ்வாறான சூழ்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான விரிவுரையாளர் தன்மை தாக்கியதாக மாணவர்கள் ஊடகங்களுக்கு 

உண்மைக்குப் புறம்பான செய்திகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் அத்துடன் .சில விரிவுரையாளர்களால் மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்றும் சிலர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மாணவர்கள் மீதுமேற் கொண்டார்கள் என்றும் மாணவர்களது 

எதிர்கால கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களால் அச்சுறுதல்கள் விடுக்கப்பட்டன என்றும்ஊடகங்களுக்கு மாணவர்களால் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்பதனைக் கலைப்பீட உறுதியாகத் தெரிவிக்கின்றது. 

என்றும் கூறியதுடன்மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் இனங்காணப்பட்டு அவாகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும் எனவும் முதற்கட்டமாக உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்கள் நுழைவதற்கு தடை அறிவிக்கப்பட வேண்டுமெனவும் 

அதுவரை விரிவுரையாளர்கள் விரிவுரைகளை மேற்கொள்ளப் போவதில்லை எனவும் கலைப்பீட அவை ஏகமனதாக தீர்மானம் மேற கொண்டுள்ளது என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.