SuperTopAds

நடுவானில் குழந்தை பெற்ற பெண்!! -விமானத்தில் நடந்த அவசர பிரசவம்-

ஆசிரியர் - Editor III
நடுவானில் குழந்தை பெற்ற பெண்!! -விமானத்தில் நடந்த அவசர பிரசவம்-

டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் பயணித்த கர்ப்பிணி பெண் ஒருவர் நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்த போதே குழந்தையினை பெற்றெடுத்துள்ளார். 

பொதுவாக ஓடும் பஸ், ரெயில், ஆட்டோ, ஆம்புலன்சுகளில் கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும் சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தது. இருப்பினும் குறித்த பெண் பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் பெண் குழந்தையினை பெற்றெடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது -

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் சொந்த வேலையாக கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று இருந்தார். நேற்று முன்தினம் மாலை அந்த பெண் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்து கொண்டு இருந்தார். 

அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் துடித்தார். இந்த நிலையில் அந்த விமானத்தில் பயணித்த பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை மகப்பேறு வைத்தியரிடம் பெண் பிரசவ வலியில் அலறி துடிப்பது குறித்து விமான பணிப்பெண்கள்  கூறினர். 

வைத்தியரின் அறிவுரையின்படி குறித்த பெண்ணுக்கு விமானத்தில் வைத்தே பிரசவம் பார்க்க விமான பணிப்பெண்கள் முடிவு செய்தனர். 

இதையடுத்து விமானத்திற்குள் ஒரு தனி அறையை போல விமான பணிப்பெண்கள் அமைத்து கொடுத்தனர். அதில் வைத்து பெண்ணுக்கு, வைத்தியர் சைலஜா பிரசவம் பார்த்தார். அவருக்கு விமான பணிப்பெண்கள் உதவியாக இருந்தனர். இதையடுத்து பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

மேலும் பெங்களூருவில் உள்ள விமான நிலைய அதிகாரிகளை, விமான பணிப்பெண்கள் தொடர்பு கொண்டு குழந்தை பிறந்தது குறித்து தெரிவித்தனர். இதையடுத்து அந்த விமானம் பெங்களூருவில் தரையிறங்கியதும், அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்சில் பெண்ணும், குழந்தையும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.