SuperTopAds

80 வயது கொரோனா நோயாளிக்கு இன்ப அதிர்ச்சி!! -கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வைத்தியர்கள்-

ஆசிரியர் - Editor III
80 வயது கொரோனா நோயாளிக்கு இன்ப அதிர்ச்சி!! -கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வைத்தியர்கள்-

சென்னை கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்pசை பெற்றுவரும் 80 வயதான கொரோனா நோயாளிக்கு வைத்தியர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். 

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 80 வயதான முதியவர் கிருஸ்ணன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக கிண்டி கிங் வைத்தியசாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வைத்தியசாலையின் இயக்குநர் வைத்தியர் நாராயணசாமி, கொரோனா நோயாளிகள் ஒவ்வொருவராக சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்து வந்தார். 

அப்போது, அந்த 80 வயது முதியவருக்கு 7 ஆம் திகதி பிறந்தநாள் என்பதை தெரிந்து கொண்ட அவர் அந்த முதியவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த ‘கேக்’ ஒன்றை வழங்கினார். 

அதைக்கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த அந்த முதியவர், அந்த சிகிச்சை நிலையத்திலேயே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.