SuperTopAds

யார் முதலில் சசிகலாவின் காலில் விழுந்து சரணடைகிறார்களோ அவர்தான் முதல்வர் வேட்பாளர்: கிண்டல் செய்த பிரபலம்!

ஆசிரியர் - Admin
யார் முதலில் சசிகலாவின் காலில் விழுந்து சரணடைகிறார்களோ அவர்தான் முதல்வர் வேட்பாளர்: கிண்டல் செய்த பிரபலம்!

சசிகலா காலில் விழுந்து சரணடைபவர்களே அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று திண்டுக்கல் லியோனி கிண்டலாக கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது. இதற்காக எடப்பாடி தன்னுடைய ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனையில் ஈடுபட்டு வருவதும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனையில் ஈடுபட்டு வருவதுமாக உள்ளனர்.

இந்நிலையில், பட்டி மன்ற பிரபலமும், திமுக கொள்கை பரப்பு செயலாளருமான திண்டுக்கல் லியோனி சசிகலா காலில் விழுந்து சரணடைபவர்களே முதல்வர் வேட்பாளர் என்று கிண்டலாக தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனைக்கு பின் திரும்பிய லியோனி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் உட்பட எல்லோருக்குமே நாற்காலிகள் மீது ஆசை உள்ளது.

என்னை பொறுத்தவரை முதல்வராக இருவருமே தகுதி இல்லாதவர்கள். சசிகலா வந்த பிறகு அவரிடம் யார் முழுமையாக சரண்டர் ஆகிறார்களோ அதன் பின் அவர்களே முழு கட்சி பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, முதல்வர் வேட்பாளராகவும் வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.