பாடசாலை விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
புதுக்குடியிருப்பில் குளதில் மூழ்கி 11 வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த சிறுவன் பாடசாலை விடுமுறை என்பதால் புதுக்குடியிருப்பு வள்ளிபுனரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில்
இன்று காலை சிறுவர்களுடன் நாவல்பழம் பறித்து சாப்பிட்டுவிட்டு இடைக்கட்டு குளத்தில் குளிக்க சென்றவேளை நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனுடன் சென்ற ஏனைய சிறுவர்கள் அயலவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து
அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட இளைஞன் மூங்கிலாறு ஆதார மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது அங்கு உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன்
சிறுவனின் உடலம் மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மரணவிசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.