பிரியா பவானி சங்கருக்கு வந்த காதல்!!
தமிழ் பட உலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில், பிரியா பவானி சங்கரும் ஒருவர். அவரின் காதல் கதை தொடர்பில் புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அவர் தற்Nபுhது ‘இந்தியன்2,’ ‘பொம்மை’ ஆகிய படங்களுடன், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வந்தார். இந்த படத்துக்கு, ‘ஓமணப்பெண்ணே’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் பிரியா பவானி சங்கர் தொழில் அதிபராக நடிப்பதாக கூறப்படுகிறது.
அவருக்கும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞருக்கும் காதல் இருந்து வருவதாக பேசப்பட்டது. இப்போது பிரியா பவானி சங்கருக்கும், ஹரீஸ் கல்யாணுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
யாருடன் உண்மையான காதல் இருக்கிறது? என்பதை பிரியா பவானி சங்கர்தான் உறுதிப்படுத்த வேண்டும்.