SuperTopAds

கூட்டு பாலியல் வன்புணர்வால் 2 பெண்கள் சாவு!! -எலும்புகளை முறித்து, உடல் முழுவதும் காயங்கள் ஏற்படுத்திய காமுகர்கள்-

ஆசிரியர் - Editor III
கூட்டு பாலியல் வன்புணர்வால் 2 பெண்கள் சாவு!! -எலும்புகளை முறித்து, உடல் முழுவதும் காயங்கள் ஏற்படுத்திய காமுகர்கள்-

உத்தரபிரதேசத்தில் தொடரும் கொடுமை: ஹத்ரஸ் பாலியல் சம்பவத்தை அடுத்து மற்றொரு பெண கூட்டு பாலியல் பலாத்காரத்தில் உயிரிழப்பு

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் ஹத்ரஸ் மாவட்டத்தில் பாலியல் சம்பவத்தை அடுத்து மற்றொரு பெண்ணும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்து உள்ளார்.

அங்கு இளைஞர்களால் 19 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலத்த காயங்களுடன் கிடந்த அப்பெண் மீட்கப்பட்டு, ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இளைஞர்கள் தாக்கியதில், அப்பெண்ணுக்கு முதுகு தண்டுவடம் நொறுங்கி இருப்பதும், பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் வைத்தியசாலைக்கு அந்த பெண் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து, டெல்லியிலும், உத்தரபிரதேசத்திலும் போராட்டங்கள் வெடித்தன. அரசியல்வாதிகள், திரையுலகினர், விளையாட்டு துறையினர் என பல்வேறு தரப்பினரும் நீதி கேட்டு குரல் கொடுத்தனர். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவத்தின் வெப்பம்  தணிவதற்குள் இதேபோன்ற மற்றொரு சம்பவம் உத்தரபிரதேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை 22 வயது தலித் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இரண்டு ஆண்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். 

பால்ராம்பூர் சம்பவத்தில், லக்னோவில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது பாதிக்கப்பட்ட பெண் இறந்தார்.

வேலைக்கு சென்ற பெண் உடலில் காயங்களுடன் திரும்பி உள்ளார்.  அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்து உள்ளார். 

இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். அந்த பெண் காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறி உள்ளார்.