தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை ஆரம்பம்!! -தகவல் வெளியிட்ட விஜயபாஸ்கர்-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தும் தடுப்பூசி தொடர்பான சோதனை முயற்சியை ஆரம்பித்திருக்கின்றோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு வைத்தியசாலைக்கு இன்று நேரில் சென்ற அவர் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் விஜயபாஸ்கர் மேற்படி தகவலை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
வைத்தியர்கள் கவச உடை அணிவதன் சிரமத்தை இன்று நான் உணர்ந்துகொண்டேன். கவச உடை அணிந்து பணிபுரிந்து வரும் வைத்தியர்களுக்கு தலைவணங்குகிறேன்.
நோய் தொற்றின் வேகத்தை ஓரிரு நாட்களில் கணிக்க முடியாது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை முயற்சியை துவங்கியிருக்கிறோம் என்றார்.