இன்றைய நாள் வாழ்கையில் முக்கியமானது!! -திரிசா வெளியிட்ட தகவல்-
இந்தியாவின் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிசா, இன்றைய நாளை தன் வாழ்க்கையை மாற்றிய நாள் என்று தெரிவித்துள்ளார்.
அவர் திரையுலகில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆகப் போகிறது. அவர் திரையுலகத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தது 1999 ஆம் ஆண்டு அவர் வென்ற ‘மிஸ் சென்னை’ பட்டம்தான்.
அந்த பட்டம் வென்ற நாளை நினைவு கூறும் வகையில் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள திரிசா, “30-09-1999, என் வாழ்க்கையை மாற்றிய நாள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.