விபத்தில் துண்டாப்பட்ட கையை மீள பொருத்தி யாழ்.போதனா வைத்தியசாலை சாதனை..! வடமாகாணத்தில் முதல் தடவை என்கிறார் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி..

ஆசிரியர் - Editor I

விபத்தினால் கை துண்டாடப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு சத்திர சிகிச்சை மூலம் துண்டாடப்பட்ட கை மீளவும் பொருத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் தலமையிலான மருத்துவ குழு துண்டாப்பட்ட கையை மீள பொருத்தும் சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

குறித்த விடயம் தொடர்பாக இன்று ஊடங்களுக்கு கருத்து கூறும்போதே பணிப்பாளர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் கைதுண்டாடப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் திகதி அதிகாலை 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை வல்லுநர் இளஞ்செழிய பல்லவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 12 மணித்தியாலங்கள் தொடர் சத்திரச்சிகிச்சை மேற்கொண்டனர். 

இந்தச் சத்திரச்சிகிச்சை வெற்றியளித்ததன் காரணமாக கிளிநொச்சி வாசியின் துண்டாடப்பட்ட கை நல்ல நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சில மாதங்களின் பின்னர் அவரது கைது பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பொதுமக்கள் கைகள்இகால் துண்டாகுதல் தொடர்பாக விழிப்புணர்வு அடையவேண்டும். வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றாலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்கமுடியாது போகக்கூடும். இது பல சிக்கலான சிகிச்சைமுறை என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு