பூரண ஹர்த்தால்..! வெறிச்சோடியது யாழ்ப்பாணம், கடும் நெருக்கடிகளையும் தாண்டி மக்கள் ஒத்துழைப்பு...

ஆசிரியர் - Editor
பூரண ஹர்த்தால்..! வெறிச்சோடியது யாழ்ப்பாணம், கடும் நெருக்கடிகளையும் தாண்டி மக்கள் ஒத்துழைப்பு...

தமிழர்களின் உரிமை மறுப்பு மற்றும் நினைவேந்தல்களுக்கான தடை ஆகியவற்றை கண்டித்து தமிழ் கட்சிகளினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கமைய யாழ்.மாவட்டம் முடக்கப்பட்டிருக்கின்றது. 

விசேடமாக யாழ்.நகரில் சகல வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது. இதேபோல் யாழ்.மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு, 

மக்கள் நடமாட்டமில்லாமல் காணப்படுகின்றது. இதேபோல் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் ஹர்த்தாலுக்கு பூரண த்துழைப்பு மக்களால் வழங்கப்பட்டுள்ளது. 

போக்குவரத்து சேவைகள், வங்கிகள் வழக்கம்போல் திறந்துள்ளன. இதேவேளை பாடசாலைகளில் மாணவர்கள் வருகை கணிசமாக குறைந்திருக்கின்றது. 

மேலும் அரச அலுவலகங்கள், வைத்தியசாலைகளில் மக்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றது. 


Radio