மோசடி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 5 குழுக்ககை மடக்கிய பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள்..! மனிதாபிமான அடிப்படையில் எச்சரித்து மன்னிப்பு வழங்கினர்..
மன்னார்- மடு மாதா தேவாலயத்திற்கு செல்லும் பாதையில் போலி தேன் விற்பனையில் ஈடுபட்டிருந்த 5 குழுக்களை மடக்கிய பிடித்த சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் மனிதாபிமான அடிப்படையில் எச்சரித்த பின் மன்னிப்பு வழங்கியுள்ளனர்.
குறித்த பகுதியில் சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் 5 குழுக்களாக பிரிந்து இவ்வாறு போலி தேன் விற்பனையில் ஈடுபட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.
இவர்கள் வவுனியா மெனிக்பாம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், கோதுமை மா, சிற்றிக் அசிட், சீனி மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து காய்ச்சி இந்த போலியான தேனை தயாரித்துள்ளதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்களது வயது மற்றும் பொருளாதார நிலமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு எச்சரித்து மன்னிப்பு வழங்கிய பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள், போலி தேன் போத்தல்களை பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.