நாளை ஹர்த்தால்..! பல்வேறு தரப்பினரும் ஒத்துழைப்பு, இலங்கை ஆசிரியர் சங்கம் பகிரங்க ஒத்துழைப்பு..
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்து தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளினால் விடுக்கப்பட்டிருக்கும் ஹர்ததால் அழைப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஒத்துழைப்பை தொிவித்திருக்கின்றனர்.
தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமை மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உள்ளிட்
தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் இணைந்து நேற்றய தினம் சாவகச்சோி சிவன்கோவில் முன்பாக பாரிய உணவொறுப்பு போராட்டத்தை நடத்தியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக 28ம் திகதி நாளை வடகிழக்கில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் வடக்கிலுள்ள வர்த்தக நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் அரச நிறுவனங்கள், போக்குவரத்து சேவைகள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி நாளைய ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பகிரங்க அழைப்பை விடுத்திருக்கின்றது. மேலும் இலங்கை ஆசிரியர் சங்கம் தங்களது ஆதரவை பகிரங்கமாக தொிவித்துள்ளனர். அதேசமயம் பல்கலைகழக மாணவர்கள் ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர்.
எனினும் வர்த்தக சங்கங்கள் தொடர்ச்சியாக அமைதியாக இருந்து வருகின்றபோதும், பெரும்பாலான வர்த்தகர்கள் தமது ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் தனியார் போக்குவரத்து சேவையும் பகிரங்கமாக எதனையும் கூறவில்லை.
ஆனாலும் அவர்களது ஒத்துழைப்பும் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.