தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான தடையை எதிர்த்து ஒட்டுசுட்டானில் உணவொறுப்பு போராட்டம்..!
தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் இணைந்து ஒரு உண்ணா நோன்புப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.
இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம்
கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செ.பிறேமகாந் பிரதேச சபை உறுப்பினர்களான க. விஜிந்ரதன் இ.இரவீந்திரன் சி.லோகேஸ்வரன்
இ.சத்தியசீலன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பொதுமக்கள் சிலரும் இணைந்து இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலய வளாகத்தில் பொலிசார் மற்றும் புலனாய்வாளர்கள் பலரும் கொண்டுவந்து விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.