திட்டமிட்டபடி இனத்தின் உரிமைகளுக்காக தமிழ்தேசிய கட்சிகளின் உணவொறுப்பு போர் ஆரம்பம்..! இறை வழிபாடுகளுடன், தியாகி திலீபனின் நினைவாக..

ஆசிரியர் - Editor

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுத்தி தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் திட்டமிட்டபடி இன்று காலை உணவொறுப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் குறித்த உணவொறுப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருந்த நிலையில் பருத்துறை நீதிமன்றம் நேற்று பிற்பகல் தடைவிதித்திருந்தது. 

இந்நிலையில் நேற்று மாலை கூடிய தமிழ்தேசிய கட்சிகள் நீதிமன்ற உத்தரவை மீறாத வகையில் திட்டமிட்டபடி உணவொறுப்பு போராட்டத்தை நடத்துவதென தீர்மானித்ததுடன், 

போராட்டம் நடைபெறும் இடத்தை இரகசியமாக வைத்திருந்த நிலையில், திட்டமிட்டபடி இன்று காலை சாவகச்சோி சிவன்கோவில் வளாகத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

போராட்டத்தில் மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், சீ.வி.கே.சிவஞானம், பா.கஜதீபன், ஈ.சரவணபவன், என்.சிறீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், க.அருந்தவபாலன், க.சுகாஸ், சுரேஸ் பிறேமச்சந்திரன் உள்ளிட்ட

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகள் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 


Radio