நடுவீதியில் ஆசிரியருக்கு பாலியல் சேட்டை!! -ஆடைகளை இழுத்து ஆசிங்கப்படுத்திய இளைஞர்கள்-

ஆசிரியர் - Editor II
நடுவீதியில் ஆசிரியருக்கு பாலியல் சேட்டை!! -ஆடைகளை இழுத்து ஆசிங்கப்படுத்திய இளைஞர்கள்-

சென்னையில் யோகா கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நடு வீதியில் வைத்து அவர் அணிந்திருந்த ஆடையை இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்சன்மாணிக்கம் ரோட்டில் இருந்து அண்ணாநகரை நோக்கி யோகா ஆசிரியர் ஒருவர் மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்திருக்கிறார். யோகா பயிற்சிக்கு சென்று வந்ததால் அவர் ரிசேட் மற்றும் நீளகால்சட்டையை அணிந்திருந்தார். 

அப்போது 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கில் ஒன்றில் ஆசிரியரை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள். தன்னை பின்தொடர்ந்து அவர்கள் வருவதை அறிந்து கொண்ட ஆசியரியர் வேகமாக செல்ல முற்பட்டுள்ளார்.

இருந்தும் துரத்திச் சென்ற இளைஞரகள் வருடைய ரீசேட்டையும், நீளகால்சட்டையையும் இழுத்து பாலியல் சேட்டை செய்துள்ளனர். 

இதனால் அச்சமடைந்த ஆசிரியர் மோட்டார் சைக்கிலை நிறுத்தியுள்ளார். குறித்த இளைஞர்களும் அங்கு இறங்கி ஆசிரியருடன் தொடர்ந்து பாலியல் சேட்டை புரிந்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 

Radio