மாஸ்டர் ஓ.டி.டி.யில் வெளியாகாது!! -லோகேஸ் கனகராஜ் தகவல்-

ஆசிரியர் - Editor II
மாஸ்டர் ஓ.டி.டி.யில் வெளியாகாது!! -லோகேஸ் கனகராஜ் தகவல்-

இளையதளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகாது என அப்படத்தின் இயக்குனர் லோகேஸ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட தலைமை விஜய் நற்பணி இயக்கம் சார்பில் மாஸ்டர் படம் வெற்றி பெற வேண்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

இந்நிகழ்வில் மாஸ்டர் திரைப்பட இயக்குனர் லோகேஸ் கனகராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். 

இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இளையதளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாக வாய்ப்பு இல்லை. மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில்தான் வெளிவரும். திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி அளித்த பின்னர் திரைப்படம் வெளியாகும் திகதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும்.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், அதனை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. திரையரங்குகளை விரைவில் திறக்கவில்லை என்றால் பலரும் கஸ்டப்படுவார்கள். எனவே விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என நம்புகிறேன் என்றார். 

Radio