6 மாதங்களின் பின் திறக்கப்பட்ட தாஜ்மஹால்!!

ஆசிரியர் - Editor III
6 மாதங்களின் பின் திறக்கப்பட்ட தாஜ்மஹால்!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் 6 மாதங்களுக்கு பின்னர் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன் இன்று காலை மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள தாஜ்மஹாலுடன் ஆக்ரா கோட்டையும் திறக்கப்பட்டது.

இந்தியாவில் பரவிய கொரோனா தொற்று நோயை அடுத்து ஆக்ராவில் உள்ள இரு உலக பாரம்பரிய தளங்களும் கடந்த மார்ச் 17முதல் மூடப்பட்டன. இந்நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள தாஜ்மஹாலை பார்வையிட ஒவ்வொரு நாளும் 5,000 சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

பிற்பகல் 2 மணிக்கு முன் 2,500 பேரும் 2மணிக்கு பின்னர் 2500பேரும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆக்ரா கோட்டையில் தினமும் 2,500 சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் ஆக்ரா பகுதிக்கான கண்காணிப்பாளர் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த பாரம்பரிய தளங்களுக்கு செல்லும் போது சுற்றுலாப்பயணிகள் சமூக இடைவெளி பேணுதல், முகக்கவசங்களை அணிதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களையும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு செல்வதற்கான அனுமதி சீட்டுக்களை இணையத்தின் ஊடாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். நேரில் பெற முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முக்கிய சுற்றுலா தளமாகவுள்ள தாஜ்மஹாலை பார்வையிட ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 இலட்சம் பேர் அங்கு செல்கின்றனர்.

ஆக்ரா கோட்டையை வருடந்தோறும் கிட்டத்தட்ட 30இலட்சம் பேர் பார்வையிடுகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்துக்கு முக்கிய வருவாயை ஈட்டி தருவதில் இந்தச் சுற்றுலா தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு