மோகன்லால், மீனாவுக்கு கொரோனா பரிசோதனை

ஆசிரியர் - Editor III
மோகன்லால், மீனாவுக்கு கொரோனா பரிசோதனை

கொரோனா பரவல் இன்னும் அடங்காத நிலையிலும், சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கி உள்ளன. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மோகன்லால், மீனா ஆகியோர் மலையாளத்தில் நடிக்கும் திரிஸ்யம் 2 ஆம் பாகம் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் இன்று தொடங்குகிறது.

மோகன்லால், மீனா உள்பட படப்பிடிப்பில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு