இலங்கை இருபதுக்கு இருபது குழாத்தில் மீண்டும் லக்மால், ப்ரதீப்!

ஆசிரியர் - Admin
இலங்கை இருபதுக்கு இருபது குழாத்தில் மீண்டும் லக்மால், ப்ரதீப்!

கொழும்பில் இம் மாதம் நடை­பெ­ற­வுள்ள சுதந்­திரக் கிண்ண மும்­முனை சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொட­ருக்­கான இலங்கை அணியில் வேகப்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளான சுரங்க லக்மால், நுவன் ப்ரதீப் ஆகிய இரு­வரும் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர். ஆனால் விக்கெட் காப்­பாளர் நிரோஷன் திக்­வெல்ல கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை.

சுரங்க லக்மால் ஒரு வரு­டத்­துக்குப் பின்­னரும் நுவன் ப்ரதீப் இரண்டு மாதங்­க­ளுக்குப் பின்­னரும் இரு­பது 20 குழாத்தில் இணைக்­கப்­பட்­டுள்­ளனர்.சில காலம் உபா­தைக்­குள்­ளா­கி­யி­ருந்த அதி­ரடி வீரர் குசல் ஜனித் பெரே­ராவும் குழாத்தில் இடம்­பி­டித்­துள்ளார்.

அண்­மைக்­கா­ல­மாக துடுப்­பாட்­டத்தில் சரிவு கண்­டுள்ள திக்­வெல்­ல­வுக்குப் பதி­லாக தனஞ்­செய டி சில்வா குழாத்தில் பெய­ரி­டப்­பட்­டுள்ளார்.


பங்­க­ளா­தேஷில் நடை­பெற்ற இரு­பது20 கிரிக்கெட் தொட­ருக்­கான இலங்கை குழாத்தில் இடம்­பெற்ற ஜெவ்றி வெண்­டர்சே மீண்டும் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை.

மூன்று வரு­டங்­களின் பின்னர் தனது மீள்­வ­ரு­கையில் பந்­து­வீச்சில் பிர­கா­சித்த சுழல்­பந்­து­வீச்சு சக­ல­துறை வீரர் ஜீவன் மெண்­டி­ஸுடன் அக்­கில தனஞ்­சய, அமல அப்­போன்சோ ஆகியோர் சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளாக குழாத்தில் இடம்­பெ­று­கின்­றனர்.

வழ­மை­யான அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ், அசேல குண­ரட்ன, ஷெஹான் மது­ஷன்க ஆகியோர் உபாதை கார­ண­மாக சேர்த்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.மெத்யூஸ் விளை­யா­டா­ததன் கார­ண­மாக இரு­பது 20 அணித் தலைவர் பத­வியும் தினேஷ் சந்­தி­மா­லிடம் இப்­போ­தைக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

சுதந்­திரக் கிண்ண மும்­முனைத் தொடரின் ஆரம்பப் போட்­டியில் இந்­தி­யாவை இலங்கை 6ஆம் திகதி சந்­திக்­க­வுள்­ளது.சுதந்­திரக் கிண்ண கிரிக்கெட் போட்­டிகள் யாவும் கெத்­தா­ராம விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெறும்.

இலங்கை குழாம்

தினேஷ் சந்­திமால் (அணித் தலைவர்), உப்புல் தரங்க, தனுஷ்க குண­தி­லக்க, குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்க, குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், சுரங்க லக்மால், இசுரு உதான, அக்கில தனஞ்சய, அமில அப்போன்சோ, நுவன் ப்ரதீப், துஷ்மன்த சமீர, தனஞ்சய டி சில்வா.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு