தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற கடல் அட்டைகள், சமையல் மஞ்சள் பறிமுதல்: மூவர் கைது: மெரைன் போலீசார் நடவடிக்கை.

ஆசிரியர் - Admin
தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற கடல் அட்டைகள், சமையல் மஞ்சள் பறிமுதல்: மூவர் கைது: மெரைன் போலீசார் நடவடிக்கை.

ராமேஸ்வரம் செப் 19,

 தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள், சமையல் மஞ்சள் அடங்கிய 22 மூடைகளை நடுக்கடலில் பறிமுதல் செய்து மீனவர்களையும் மெரைன் போலீசார் கைது செய்தனர்.

   பாம்பன் பாலம் கடல் வழியாக வெளி மாவட்ட படகு ஒன்றில் இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மெரைன் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குந்துக்கால் கடற்கரையில் இன்று காலை முதல் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது பாம்பன் குந்துகால் கடலில் பைபர் நாட்டு படகு ஒன்று இயந்திரப் பழுதாகி நின்று கொண்டிருந்தது. ரோந்து பணியில் இருந்த மெரைன் போலீசார் படகில் உள்ள மீனவர்களிடம் விசாரணை நடத்தியத்தில் மீனவர்கள் முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்துள்ளனர். இதனால்;, சந்தேகம் அடைந்த போலீசார் படகில் ஏறி சோதனை செய்த போது படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக 22 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் ஆகியவை படகில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. 

   பின்னர் மீனவர்களிடம் மெரைன் போலீசார் நடத்திய கிடுக்குடி விசாரணையில்  இந்தப் படகில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகளும், சமையல் மஞ்சளும் கடத்தி செல்வதற்காக படகில் எடுத்து சென்ற போது நடுவழியில் எஞ்சின் பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்து நின்றதாகவும்; தெரிவித்தனர்.  

  இதனை தொடர்ந்து படகில் இருந்த தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சார்ந்த மலையாண்டி, தூத்துக்குடி திரேஸ்புரம் சோர்ந்த ஜெயக்குமார் மற்றும் பெலதீன் ஆகிய மூன்று மீனவர்களை கைது செய்து மெரைன் போலீசார் படகு அதிலிருந்த கடல் அட்டைகள், சமையல் மஞ்சள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  22 மூடைகளில் சுமார் 800 கிலோ கடல் அட்டைகளும், 400 கிலோ மஞ்சளும் இருந்ததாக மெரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ்  தெரிவித்தனர். 

   மேலும் கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள்  மற்றும் சமையல் மஞ்சளின்  சர்வதேச மதிப்பு சுமார் 20 லட்சம் இருக்கலாம் என பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு