அனுஸ்காவின் புதிய வெளியிடு!!

ஆசிரியர் - Editor II
அனுஸ்காவின் புதிய வெளியிடு!!

அனுஸ்கா நடடித்த சைலென்ஸ் படம் எதிர்வரும் 2 ஆம் திகதி ஓ.டி.டி.யில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ், மலையாள மொழிகளில் சைலென்ஸ் என்ற பெயரிலும் தெலுங்கில் நிபந்தம் என்ற பெயரிலும் தயாராகி உள்ள படமும் அடுத்த மாதம் (அக்டோபர்) 2 ஆம் திகதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பெரிய நடிகையான அனுஷ்கா படமும் ஓ.டி.டி. தளத்துக்கு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் மாதவன், அஞ்சலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஹேமந்த் மதுகர் இயக்கி உள்ளார். திகில் படமாக தயாராகி உள்ளது. அனுஸ்கா வாய்பேசாத, காது கேளாத பெண்ணாக நடித்து இருக்கிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்துள்ளது.

Radio