SuperTopAds

முல்லைத்தீவில் ரவிகரனுக்கும் தடை..! நீதிமன்ற கட்டளை நோில் கையளிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவில் ரவிகரனுக்கும் தடை..! நீதிமன்ற கட்டளை நோில் கையளிக்கப்பட்டது..

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும்அவர் சார்ந்த குழுவினர் இம்முறை 18.09.2020தொடக்கம் 26.09.2020வரையான காலப்பகுதியில், தியாக தீபம் திலீபனுடைய நினைவேந்தலையோ, உண்ணாவிரத நிகழ்வுகளையோ முன்னெடுக்கமுடியாது 

என முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தடைக்கட்டளை உத்தரவைப்பிறப்பித்துள்ளது.முல்லைத்தீவு தலைமை போலீஸ் பரிசோதகர் இது விடயம் தொடர்பில், முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் AR/681/2020 வழக்கிலக்கத்தில் வளக்குத்தாக்கல் செய்ததற்கமைய, 

நீதிமன்றம் குறித்த தடைக்கட்டளை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.இந் நிலையில் முல்லைத்தீவு தலைமைப் போலீஸ் பரிசோதகர் 18.09.2020 இன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் இல்லத்திற்குச் சென்று நீதிமன்றத்தின் குறித்த தடைக்கட்டளை உத்தரவினை அவரிடம் கையளித்துள்ளார். 

மேலும் குறித்த தடைக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு தலைமைப் பொலீஸ் பரிசோதகரினால், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்த திலீபன் எனப்படும் இராசையா பார்த்தீபன் ணஎன்பவரை நினைவுகூரும் முகமாக 

துரைராசா ரவிகரன் ஆகிய உங்களால் உண்ணாவிரத நினைவு வைபவத்தினையும், ஒன்றுகூடல் கூட்டத்தினையும் 18.09.2020 தொடக்கம் 26.09.2020ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு போலீஸ் பிரிவுக்குட்பட்ட நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக விண்ணப்பித்து, 

இச் செயலானது பொலீஸ் சட்டக்கோவை 79(2)பிரிவின்கீழ் சேர்த்து வாசிக்கப்படும் 79(3) சட்டக்கோவைப் பிரிவின்கீழ் தண்டிக்கப்படவேண்டிய குற்றமாகும். மேலும் 1891ஆம் ஆண்டு 3ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்கள் தடுப்புச்சட்டக்கோவையின் கீழ் தண்டிக்கப்படவேண்டிய குற்றம் என்பதுடன் 

பயங்கரவாதத் ஒழிப்பு சம்பந்தமாக 2011.08.29ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி இலக்கம் 1721/2கீழ் தண்டிக்கப்படவேண்டிய குற்றம் என விண்ணப்பத்தை மேற்கொண்டுள்ளார்.இதனடிப்படையில் அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புத் தொடர்பில் பெயர்குறிப்பிடப்பட்ட நீவீர் 

எவ்விதமான உண்ணாவிரத நிகழ்வுகளையோ, நினைவேந்தல் கூட்டங்களையோ, வேறு ஏதேனும் வைபவங்களை 18.09.2020தொடக்கம் 26.09.2020வரையான காலப்பகுதியில் நடாத்துவதற்கு 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையின் 106(1) (3) பிரிவின் 

கீழ் எனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் தடைசெய்து கட்டளையாக்குகின்றேன். என குறித்த நீதிமன்ற தடைக்கட்டளையில் குறிப்படப்பட்டுள்ளது.