இலங்கை வங்கியில் பெற்ற கடனை மீள செலுத்த முடியாத யாழ்.மாவட்ட விவசாயிகள் குறித்து இலங்கை வங்கி தலைவருடன் பேச்சு..!

ஆசிரியர் - Editor
இலங்கை வங்கியில் பெற்ற கடனை மீள செலுத்த முடியாத யாழ்.மாவட்ட விவசாயிகள் குறித்து இலங்கை வங்கி தலைவருடன் பேச்சு..!

இலங்கை வங்கியில் காப்புறுதி செய்யப்பட்ட பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டபோதும் குறித்த வங்கி இழப்பீடு வழங்கவில்லை. என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அவ்வாறான காப்புறுதி எதனையும் செய்யவில்லை. என இலங்கை வங்கி அதிகாரிகள் மறுதலித்துள்ளனர். 

அண்மையில் மத்திய விவசாய அமைச்சர் யாழ்ப்பாணம் வந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதன்போது குறிப்பிட்ட இலங்கை வங்கி அதிகாரிகள் வடமாகாண விவசாயிகளுக்கு 1.1 பில்லியன் ரூபாய் மீள்செலுத்தும் கடன் வழங்கப்பட்டிருக்கின்றது. 

ஆனாலும் விவசாயிகள் அதனை மீள செலுத்தவில்லை. குறிப்பாக கால அவகாசம் கொடுத்தும் கடனை மீள செலுத்த முடியவில்லை என கூறியிருந்தனர். குறித்த காப்புறுதி இழப்பீடு வழங்கப்படாமையாலேயே கடனை மீள செலுத்த முடியவில்லை. என விவசாயிகள் கூறியிருந்தனர். 

இதன்போது பதிலளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை வங்கியின் தலைவருடன் இந்த விடயம் தொடர்பாக பேசி வட்டியை நீக்கி கடன் தொகையை மட்டும் மீள செலுத்தும் வகையிலான ஒரு பொறிமுறையை உருவாக்குவதாக தொிவித்திருக்கின்றார். 

Radio