யாழ்.பல்கலைகழகத்தில் நடந்தது இணையவழி பாலியல் இம்சை..! அது பகிடிவதை அல்ல, துணைவேந்தர் காட்டம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழகத்தில் இணையவழி பகிடிவதை நடக்கவில்லை. இணையவழி பாலியல் இம்சை நடந்துள்ளதாக கூறியிருக்கும் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராசா, பல்வேறு பரிமாணங்களில் இந்த இம்மை நடப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

யாழ்.பல்கலைகழக முகாமத்துவ பீடத்தில் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் பகிடிவதைகள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், புகுமுக மாணவர்கள் மீது இவ்வாறான இம்சைகள் புரியப்படுகின்றது. இவை பல்வேறு பரிமாணங்களில் நடைபெறுகின்றன.கோவிட்- 19 இடர் நிலைமைகளினால் கற்றல்கள் இணையவழியில் இடம்பெற ஆரம்பித்திருந்தோம். 

இம்சையாளர்களும் இணையத்தில் தமது இம்சைகளை மேற்கொள்கின்றன. ஊடகங்களும், பொது மக்கமும் ஒன்றினைந்து பகிடிவதையை வேறறுக்க முடியும். இரண்டு நாட்களுக்குள் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு குற்றப் பத்திரத்தை தயாரித்து 

ஏழு நாட்களுக்குள் இம்சைச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட நபர்கள் பதில் வழங்குவதற்கு கால அவகாசம் வழங்கப்படும். மாணவர்கள் ஓழுக்காற்று சபை ஒன்றினையும் உருவாக்கியுள்ளதாகவும் இம்சைப்படுத்தல் தொடர்பில் 

உரிய கவனம் செலுத்தப்படும் எனவும், தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு