இணையவழி பாலியல் பகிடிவதை..! 4 மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளிலிருந்து இடைநீக்கம், கனிஷ்ட மாணவர்கள் இருவர் விடுதிகளில் இருந்து வெளியேற்றம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழகத்தில் கனிஷ்ட மாணவர்கள் மீது இணையவழி பாலியல் பகிடிவதை புரிந்து குற்றச்சாட்டில் 4 மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இரு கனிஷ்ட மாணவர்கள் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

மேற்கண்டவாறு யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி நிமலதாஸன் கூறியிருக்கின்றார். சமூக வலைத்தளங்கள் ஊடாக பாலியல் பகிடிவதை இடம்பெற்றதாக தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பாக 

இன்று யாழ்.பல்கலைகழகத்தில் ஊடகங்களை சந்தித்து பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், அண்மையில் நடைபெற்ற பகிடிவதை தொடர்பில் உத்தியோகப்பற்ற முறையில் வெளியாகிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் 

10 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் முகாமைத்துவ வணிக பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டு  அவர்கள் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 

அதேவேளை குறித்த பகிடி வதை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவரும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் இனங்காணப்பட்ட மாணவர்கள் குறித்த விபரங்கள் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்காலத்தில் பகிடிவதையில் ஈடுபடுகின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள தண்டனைகள் தொடர்பிலும் விளக்கமளித்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பகிடிவதைகளை கட்டுப்படுத்துவதற்கு சமூகத்தினதும் ஒத்துழைப்பினையும் கோரியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு