மோடிக்கு 70 ஆவது பிறந்தநாள்!! -குவியும் வாழ்த்துக்கள்-

ஆசிரியர் - Editor II
மோடிக்கு 70 ஆவது பிறந்தநாள்!! -குவியும் வாழ்த்துக்கள்-

இந்திய பிரதமர் மோடியின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் பல்வேறு பணிகளுடன் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது.

அவரின் பிறந்த நாளை அடுத்து நாடு முழுவதும் பாஜகவினர் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

மேலும் மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், வெளிநாடுகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பலர் டுவிட்டரில் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர். 

Radio