உலகில் முதலாவது இடத்தை நெருங்கும் இந்தியா!! -51,18,254 பேருக்கு கொரோனா தொற்று-

ஆசிரியர் - Editor III
உலகில் முதலாவது இடத்தை நெருங்கும் இந்தியா!! -51,18,254 பேருக்கு கொரோனா தொற்று-

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்படும் நாடுகளில் பட்டியலில் இந்தியா முதலிடத்திற்குச் செல்லும் வகையில் அங்கு தொற்று அதிகரித்து வருகின்றது. 

இதன்படி அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 51,18,254 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2 ஆவது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 97,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மேலும் 1,132 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 51 இலட்சத்தை தாண்டி,  51 இலட்சத்து 18 ஆயிரத்து 254 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 10 லட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 40 இலட்சத்து 25 ஆயிரத்து 80 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 83 ஆயிரத்து 198 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு