2 கோடி கேட்கும் சாய்பல்லவி!!

ஆசிரியர் - Editor II
2 கோடி கேட்கும் சாய்பல்லவி!!

பிரேமம் வெற்றி படத்தில் நடித்து பிரபலமான சாய்பல்லவிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கான அதிக வாய்ப்புகள் வந்துள்ள நிலையில் அவர் 2 கோடி ரூபா சம்பளத்தை கோரியுள்ளார்.

அவர் தற்போது தெலுங்கில் விராட பருவம், நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி படங்களில் நடித்து வருகிறார். விராட பருவம் படத்தில் நக்சலைட் கதாபாத்திரம் ஏற்றுள்ளார். கொரோனா ஊரடங்கினால் முடங்கிய லவ் ஸ்டோரி படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. 

எதிர்வரும் டிசம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அடுத்து நானி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க சாய்பல்லவியை அணுகி உள்ளனர். அதில் நடிக்க சாய்பல்லவி 2 கோடி சம்பளம் கேட்டதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. 

அந்த தொகையில் இருந்து கொஞ்சம் குறைக்கும்படி படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ராகுல் சங்ரித்யன் இயக்குகிறார். கொல்கத்தாவில் சம்பவங்கள் நடப்பதுபோன்று திரைக் கதை அமைத்துள்ளனர். இவ்பத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Radio