இலங்கையில் “மசாஜ்” நிலையங்கள் அற்ற மாகாணமாக வடமாகாணம்..! தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக அடையாளப்படுத்தப்பட்டது..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் “மசாஜ்” நிலையங்கள் அற்ற மாகாணமாக வடமாகாணம்..! தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக அடையாளப்படுத்தப்பட்டது..

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மசாஜ் நிலையங்கள் தொடர்பான புள்ளிவிபரங்களில் வடமாகாணத்தில் எந்தவொரு மசாஜ் நிலையங்களும் இல்லை என அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

நாட்டில் 719 மசாஜ் நிலையங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவற்றில் ஒன்றுகூட வடமாகாணத்தில் இல்லை. எனவும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

தகவல் அறியும் சட்டத்தின் கீழ், பொலிஸ் திணைக்களத்திடம் தேசிய பத்திரிகை ஒன்று பெற்றிருக்கும் தகவலிலேயே மேற்படி விடயம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

2019ஆம் ஆண்டின் இறுதிவரையிலான காலப்பகுதியில் கிடைத்த தரவுகளிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் மசாஜ் நிலையங்களின் எண்ணிக்கைக் 

குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் 719 மசாஜ் நிலையங்கள் காணப்படுகின்றன. வடக்கு மாகாணத்தில் மாத்திரமே 

பதிவு செய்யப்பட்டுள்ள எந்தவொரு மசாஜ் நிலையங்களும் இல்லை. இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நாட்டிலுள்ள மொத்த மசாஜ் நிலையங்களின் எண்ணிக்கையில் 2 சதவீதத்துக்கும் குறைவான 

மசாஜ் நிலையங்களே காணப்படுகின்றன. இதன்படி, கிழக்கு மாகாணத்தில் 13, ஊவா மாகாணத்தில் 32, சப்ரகமுவ மாகாணத்தில் 36, வடமேல் மாகாணத்தில் 49, மத்திய மாகாணத்தில் 56, 

வடமத்திய மாகாணத்தில் 60, தென் மாகாணத்தில் 119, மேல் மாகாணத்தில் 354 மசாஜ் நிலையங்களும் காணப்படுகின்றன. நாட்டிலுள்ள மொத்த மசாஜ் நிலையங்களில் சுமார் 50 சதவீதமான மசாஜ் நிலையங்கள் 

மேல் மாகாணத்திலேயே காணப்படுகின்றன, அந்தத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு