கொரோனா என்ற பெயருடன் வாழும் 34 வயதான பெண்!!- அதிர்ந்து போன வைத்தியர்கள்-

ஆசிரியர் - Editor II
கொரோனா என்ற பெயருடன் வாழும் 34 வயதான பெண்!!- அதிர்ந்து போன வைத்தியர்கள்-

இந்தியாவில் கேரள மாநிலம் ஆழப்புலாவில் உள்ள சுங்கோன் என்ற பகுதியில் கொரோனா என்ற பெயருடன் 34 வயதான பெண் ஒருவர் வசித்து வருகின்றார்.

இவருக்கு 34 வருடங்களுக்கு முன் ஒரு பாதிரியாரால் இப்பெயர் சூப்படப்ப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு குறித்த பெயர் சுட்டப்பட்டதன் அர்த்தம் கிரவுன் (ஊசழறn) அதாவது கிரீடம் என்பதாகும்.

தற்போது உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் கொரோனா என்கிற்ன பெயர் அனைவருடைய மனத்திலும் ஒரு மரண பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணுடைய பெயர் கொரோனா என்பதால் அவரை பார்த்தும் அப்பகுதியில் உள்ளவர்கள் அஞ்சுகிறார்கள், மேலும் ஒரு சிலர் அவரை கேலி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இரத்த தானம் செய்வதற்காக பெயரை எழுதியபோது மருத்துவர்களே தனது பெயரைப் படித்து அதிர்ச்சியடைந்ததாக திருமதி.எஸ்.கொரோனா கவலைத் தெரிவித்துள்ளார்.

Radio