அனிருத்தின் காதலி யார் தெரியுமா? -வெளியானது இரகசிய தகவல்-

ஆசிரியர் - Editor II
அனிருத்தின் காதலி யார் தெரியுமா? -வெளியானது இரகசிய தகவல்-

தமிழ் திரையுலகில் முன்னணி இளம் இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், பிரபல பாடகியை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அனிருத், பிரபல பாடகி ஜோனிடா காந்தியை காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் கூட ஜோனிடா காந்தியும், அனிருத்தும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்காக சேர்ந்து பாடிய ‘செல்லம்மா’ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

பாடகி ஜோனிடா, டெல்லியில் பிறந்து கனடாவில் வளர்ந்தவர். யூடியூப் மூலம் பிரபலமான ஜோனிடா காந்தி ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் மூலம் தன் திரையுலக பயணத்தை துவங்கினார். 

அவரை ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெறும் மெண்டல் மனதில் பாடல்மூலம், ஏ.ஆர்.ரகுமான் தான் தமிழில் அறிமுகம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சுச்சீ லீக்ஸ் பரபரப்பாக இருந்தபோது அனிருத், ஆண்ட்ரியா முத்தம் கொடுத்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. 

ஆனால் அவை மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்று கூறப்பட்டது. அதன் பிறகு எந்தவித காதல் சர்ச்சையிலும் அனிருத் சிக்காமல் இருந்த நிலையில், தற்போது பாடகி ஜோனிடாவை அவர் காதலிப்பதாக கூறப்படுகிறது.

Radio