கொரோனா தடுக்க தடுப்பூசி விரைவில்!! -பிரதமர் மோடி உறுதி-

ஆசிரியர் - Editor II
கொரோனா தடுக்க தடுப்பூசி விரைவில்!! -பிரதமர் மோடி உறுதி-

கொரோனா வைரசுக்கான தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இந்த கூட்டத்தொடரை இன்று முதல் அக்டோபர் முதலாம் திகவதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று வருகை தந்தார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் மத்தியில் கருத்தும் தெரிவித்திருந்தார். 

இதன் போது கொரோனா முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். 

உலகின் எங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Radio