அதை நினைத்து பயப்பட வேண்டாம்;!! -கீர்த்தி சுரேஸ் பரபரப்பு தகவல்-

ஆசிரியர் - Editor II
அதை நினைத்து பயப்பட வேண்டாம்;!! -கீர்த்தி சுரேஸ் பரபரப்பு தகவல்-

கொரோனா வைரசை நினைத்து பயப்பட வேண்டாம் என்று நடிகை கீர்த்தி சுரேஸ் கூறியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்கானலியே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

மனிதனுக்கு பணம் பெரிது அல்ல. மனிதாபிமானம் மிக முக்கியம் என்பதை கொரோனா கற்றுக்கொடுத்து இருக்கிறது. ஊரடங்கில் முதல் ஒரு மாதம் மிகவும் சலிப்படைய வைத்தது. 

ஊரடங்குக்கு பின் முதல் முதலாக ரஜினிகாந்த் படத்தில் நடிக்க இருக்கிறேன். கொரோனா முற்றிலும் அழிந்த பின் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் ஆர்வம் இருக்கிறது. 

கொரோனாவை நினைத்து பயப்படுகிறவர்களுக்கு நான் கொடுக்கும் ஆலோசனைகள் என்ன வென்றால் பயப்படக்கூடாது. எப்போது என்ன தேவை வந்தாலும் எனக்கு முதல் ஞாபகம் வருவது எனது அம்மாதான். 

கொரோனா காலத்தில் ஒவ்வொருவருக்கும் தைரியம் கொடுப்பது அவர்கள் அம்மாதான். உனக்கு ஒன்றும் ஆகாது என்ற வார்த்தை அம்மா வாயில் இருந்து வந்தால் நமக்கு ஆயிரம் யானைகள் பலம் வந்த மாதிரி இருக்கும். 

புதிய விடயங்களும் நிறைய கற்றுக்கொண்டேன். அளவுக்கு மீறாமல் பிடித்ததை சாப்பிடுவேன் என்றார்.

Radio