விபத்தில் சிக்கிய 14 வயது சிறுவன் உயிரிழப்பு..! இராணுவத்தினர் காப்பாற்றுவதற்கு போராடியும் பயனில்லை, ஒருவர் கைது, மற்றொருவர் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor
விபத்தில் சிக்கிய 14 வயது சிறுவன் உயிரிழப்பு..! இராணுவத்தினர் காப்பாற்றுவதற்கு போராடியும் பயனில்லை, ஒருவர் கைது, மற்றொருவர் தப்பி ஓட்டம்..

சைக்கிளில் பயணித்த 14 வயது சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் இராணுவத்தினால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளான். 

இந்த சம்பவம் வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கிசென்ற மோட்டார் சைக்கிள் நொச்சிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனுடன் 

மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த இ.புவிதன் (வயது14) என்ற மாணவன் படுகாயங்களுக்குள்ளாகி 

இராணுவத்தினரின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 

டலம் தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 

மற்றையநபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Radio