அடுக்கடுக்காக தவறுகள்..! தவறு செய்தவர்கள் இப்போதும் கடமையில், கனவான் வேஷத்தில் இருப்போரே இரணைமடு பூதம் எப்போது வெளியே வரும்..?
2018ம் ஆண்டு இரணைமடு குளத்தினால் ஏற்பட்டிருந்த அனர்த்தம் தொடர்பான விசாரணை அறிக்கை மறைக்கப்பட்டிருக்கும் நிலையில் நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள் 3 பேருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் விசாரணையாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரணைமடு குளத்தின் இயங்குதல் மற்றும் பராமரித்தலுக்கு பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுக்க தவறியமை, அனர்த்தம் இடம்பெற்ற காலத்தில் நீர்ப்பாசன பொறியியலாளராக பணியாற்றியவருக்கு குளத்திற்கு அருகில் வழங்கப்பட்ட தங்குமிடத்தில் தங்கியிருக்காமை,
நீர்ப்பாசன பணிப்பாளருக்கு கடமை பட்டியல் வழங்கப்பட்டமை தொடர்பில் முறமை பின்பற்றப்படாமை, நேரடி மேற்பார்வை உத்தியோகஸ்த்தரான அமைச்சு செயலாளருக்கு அனர்த்தம் தொடர்பாகவும், முன்னாயத்த நடவடிக்கை தொடர்பாகவும் அறிவிக்கப்படாமல்,
ஆரை கதவுக்கு மேலாக நீர் பாயும் வரையில் தீர்மானம் எடுக்காமை போன்ற நிர்வாக குறைபாடுகள் இடம்பெற்றமை அம்பலமாகியுள்ளது. மேலும் பிராந்திய பிரதி நீர்ப்பாசன எந்திரி மாவட்ட பிரிவுக்கு பொறுப்பான எந்திரிக்கு கடமை பட்டியலை வழங்கவில்லை.
மேலும் அவரை அந்த பிரிவில் தங்கவைக்க தவறியுள்ளார். இதபோல் ஆரை கதவுக்குமேல் நீர் பாயும் வரையில் தீர்மானம் எடுக்காமை தொடர்பில் விசாரணை குழு இருவர் மீது அறிக்கையிட்டுள்ளது. மேலும் பிரிவுக்கு பொறுப்பான எந்திரி கடமை பிரிவில் இல்லாமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரிவுக்கு பொறுப்பான தொழிநுட்ப உத்தியோகஸ்த்தர் சுழற்சிமுறையில் இரவு கடமைக்கு செல்லவேண்டியிருந்தும் எழுத்துமூலமான அனுமதி எதனையும் பெறாமல் விடுமுறையில் சென்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.
இதேபோல் பிரிவுக்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியலாளர் 5 வருட அனுபவம் கூட இல்லாத நிலையில் பாரிய திட்டமான இரணைமடுக் குளத்தினை பொறுப்பேற்கும் அளவுக்கு அவருக்கு தகுதி இல்லை. என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு பல்வேறு நிர்வாக முறைகேடுகளை அம்பலப்படுத்திய இரணைமடு வெள்ள அனர்த்தம் தொடர்பான விசாரணை அறிக்கை வடக்கு உயரதிகாரிகள் கையில் கிடைக்கப் பெற்றும் ஏன் இதுவரை மௌனம் காக்கிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் எழுகின்றது
அதிகார மோகம் அரசியல் பின்புலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வழங்கப்படாமலும் இவ் அனர்த்தத்தினால் அரசாங்கத்தின் சொத்துகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை மக்களா பொறுப்பேற்பது? மேலும் அனர்த்ததின் பின்னர் அப்போதைய அரசாங்கத்தினால் இழப்பீடாக வழங்கப்பட்ட
31 மில்லியன் ரூபாய் நிதியில் ஒரு பகுதி இரணைமடு வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட ஒரு பாடசாலைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அனர்த்தத்துடன் சம்மந்தப்படாத வேறு மாவட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டமையும் விசாரணை குழுவினால் கண்டறியப்பட்டுள்ளது.