விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! -மாஸ்டர் படம் வெளிவருகிறது-

ஆசிரியர் - Editor II
விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! -மாஸ்டர் படம் வெளிவருகிறது-

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் ‘மாஸ்டர்’ படத்தை ஓடிடி-யில் வெளிவருவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், பல்வேறு திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்படுகின்றன.  குறிப்பாக லோகேஸ்  கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படமும் ஓடிடி-யில் ரிலீஸாக இருப்பதாகவும், அமேசானுடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Radio