இந்தியாவில் கொரோனா தீவிரம்!! -24 மணி நேரத்தில் 94,372 பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் கொரோனா தீவிரம்!! -24 மணி நேரத்தில் 94,372 பேருக்கு தொற்று-

இந்தியாவில் மிக மோசமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 94,372 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 47 இலட்சத்து 54 ஆயிரத்து 357 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 இலட்சத்து 73 ஆயிரத்து 715 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 37 இலட்சத்து 2 ஆயிரத்து 596 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆயிரத்து 586 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Radio