வடமாகாண கடற்பகுதியில் தொடரும் அத்துமீறல்..! அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு,

ஆசிரியர் - Editor I

இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் சட்டவிரோத மின்பிடி நடவடிக்கைகள் மற்றும் சில சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அதியுச்ச கண்காணிப்பு நடவடிக்கைகளில் கடற்படையை ஈடுபடுத்தி பாதுகாப்பை பலப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. 

நேற்று நாடாளுமன்றில் இந்திய மீனவர்கள் தொடர்பாக பேசப்பட்டபோதே இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர மேற்படி விடயத்தை கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் கூறிய இராஜாங்க அமைச்சர், கொரோனா அச்சம் காரணமாக குறிப்பாக இந்திய மீனவர்களை கண்காணிக்கவும், கைது செய்யவும் முடியவில்லை. 

அதனை மீறி கண்காணித்து கைது செய்தாலும் அவர்களை எங்கே தடுத்துவைப்பது? இதேவேளை கடற்படையினர் தற்போது பாரிய இடர் தவிர்ப்பு நடவடிக்கையில் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் நாங்கள் வடக்கு கடலில் நடக்கும் அத்துமீறல்களை தொடர்ந்தும் அவதானிக்கிறோம். 

இதனடிப்படையில் கண்காணிப்பை அதிகரித்து பாதுகாப்பை இறுக்கமாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு தீர்மானித்துள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு