இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்களை திறக்கும் உத்தரவுக்கு என்ன நடந்தது? ஆளுநரும் மறந்துபோனார், மக்களும் மறந்துபோயினர்..
யாழ்.மாவட்டம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களில் இரவு 10 மணி வரையில் வர்த்தக நிலையங்களை திறக்குமாறும், அதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி வழங்கிய உத்தரவு வெறும் வாய்ப்பேச்சில் முடிந்திருக்கின்றது.
கடந்த மாதம் 15ம் திகதி வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம். சாள்ஸ் அம்மையாரும் அவரை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் உத்தரவு பிறப்பித்திருந்தனர். எனினும் இந்த உத்தரவு வெறும் வாய்ப்பேச்சிலேயே முடிந்திருக்கின்றது. வழங்கப்பட்ட உத்தரவிலே குறிப்பிட்டதைபோல் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவில்லை.
மேலும் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நிறைவேற்ற முடியாத உத்தரவுகளை வழங்குவது பின்னர் அந்த உத்தரவுகளை மக்களும், உத்தரவிட்டவர்களும் மறப்பது வழக்கமாகிவிட்டது என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.