SuperTopAds

ஐ.சி.யூ.வில் திருமண நாளுக்கு கேக் வெட்டி கொண்டாட்டம்!! -எஸ்.பி.பி சாவித்திரி தம்பதியினர்-

ஆசிரியர் - Editor III
ஐ.சி.யூ.வில் திருமண நாளுக்கு கேக் வெட்டி கொண்டாட்டம்!! -எஸ்.பி.பி சாவித்திரி தம்பதியினர்-

திருமண நாளை முன்னிட்டு பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. தனது மனைவியுடன், அதிதீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.

பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  நேற்று எஸ்.பி.பி. - சாவித்ரி தம்பதியின் 51 ஆவது திருமண நாள் என்பதால், எஸ்.பி.பி.யை பார்க்க மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி சாவித்ரி, தங்களது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதிதீவிர சிகிச்சை பிரிவில் வைத்து வைத்தியர்களின் உதவியுடன் எஸ்.பி.பி. - சாவித்ரி தம்பதி கேக் வெட்டியதாக கூறப்படுகிறது.