SuperTopAds

திடீரென தீப்பற்றி எரிந்த கோவில் தேர்!! -அதிர்ச்சியில் பக்தர்கள்-

ஆசிரியர் - Editor III
திடீரென தீப்பற்றி எரிந்த கோவில் தேர்!! -அதிர்ச்சியில் பக்தர்கள்-

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோவில் தேர் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சொந்தமான தேர் நேற்று நள்ளிரவு திடீரென இந்த தேர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் தேர் முழுவதும் எரிந்து கரிக்கட்டையானது. கோவிலுக்கு சொந்தமான வரலாற்று சிறப்பு மிக்க தேர் எரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.