ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு, வடக்கு மாகாணத்திலிருந்து தொிவு செய்யப்பட்ட 13540 போில் 4230 போின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்..!

ஆசிரியர் - Editor I

ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்திலிருந்து இருந்து தேர்வு செய்யப்பட்ட 13540 போில் 4230 போின் பெயர்கள் நீக்கப்பட்டு மிகுதி 9310 பேருக்கு மட்டுமே நியமனங்கள் வழங்கப்படவுள்ளது. 

குறைந்ந வருமானம் பெறும் ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்சமயத்திற்கு கவனத்தில்கொள்வதில்லை எனஉள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 19ம் திகதி மாலை அவசர உத்தரவை பிறப்பித்திருந்தது.

க.பொ.த சாதாரணம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு பூராகவும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அறிவித்த அரசு தற்போது வடக்கு கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிட்ட அதேநேரம் 

ஏனைய 7 மாகாணங்களிலும் அதனை வழங்க அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு இடைநிறுத்துவதற்கான உத்தரவு வடக்கு கிழக்கின் 8 மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலகங்களிற்கு கடந்த 19 மாலை தொலை நகல் 

மற்றும் மின் அஞ்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதேநேரம் இந்த எண்ணியில் ஏனைய 7 மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரு லட்சம் வேலை வாய்ப்பும் 7 மாகாணத்திற்குள் முடக்கப்படுமா?

என்ற ஐயம் அப்போது எழுப்பப்பட்டது. இதேநேரம் வடக்கு கிழக்கில் போட்டியிட்ட அரச ஆதரவுக் கட்சிகள் இந்த வேலை வாய்ப்பினை வழங்குவதாக ஆசை வார்த்தைகள் கூறியே இளையோரின் வாக்கினையும் தேர்தல் பணிகளையும் 

பெற்றதான குற்றச் சாட்டுக்களும் எழுந்தன. இந்த நியமனத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 626 பேரும் , கிளிநொச்சியில் 2 ஆயிரத்து 261 பேரும் , மன்னாரில் ஆயிரத்து 830 பேரும் , முல்லைத்தீவில் ஆயிரத்து 565 பேரும் 

நியமிக்கப்படவிருந்ததோடு வவுனியாவில் ஆயிரத்து 258 பேரும் என 13 ஆயிரத்து 540 பேர் நியிமிக்க தயாராக இருந்தனர். இவர்களிற்கு கடந்த 31ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்படும் எனவும் 

மாவட்டச் செயலகங்களிற்கு உறுதியளிக்கப்பட்டது. இருந்தபோதும் வடக்கு கிழக்கிற்கு அதிக நியமனம் செல்வதாக தெரிவித்து அனைத்தும் இடை நிறுத்தப்பட்டு தற்போது ஒரு கிராம சேவகர் பிரிவில் 10 பேரிற்கு மட்டுமே என்ற அடிப்படையில் 

குறித்த எண்ணிக்கை பாதியாக குறைகின்றது. இதனால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 626 பேரிற்குப் பதிலாக 4 ஆயி்த்து 350 பேருக்கும் , கிளிநொச்சியில் 2 ஆயிரத்து 261 பேரிற்கு வழங்கப்பட்ட அனுமதி 950 பேராகவும் , 

மன்னாரில் ஆயிரத்து 830 பேரிற்கு முன்பு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆயிரத்து 530 பேரிற்குமே சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முன்னர் ஆயிரத்து 565 பேரிற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 

தற்போது ஆயிரத்து 360 பேர் நியமிக்கப்படவிருப்பதோடு வவுனியாவில் ஆயிரத்து 258 பேரும் என முன்னர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆயிரத்து 20 பேரிற்கே அனுமதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்திற்கு முன்னர் 13 ஆயிரத்து 540 பேர் நியிமிக்க அனுமதிக்கப்பட்டபோதும் இந்த தொகைநில் 4 ஆயிரத்து 230 பேரை நீக்கி 9 ஆயிரத்து 210 பேரிற்கு மட்டுமே நியமனம் வழங்கப்படவுள்ளது.

வடக்கு கிழக்கிற்கு இடை நிறுத்தினாலும் இந்த நியமனம் கிடைக்கும் என அமைச்சர்களும் அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தபோதும் இவ்வாறு பல ஆயிரம் பேரை நீக்கியமை தொடர்பில் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு