இரணைமடு விசாரணை அறிக்கையை மறைத்த பெருச்சாளிகள் யார்..? தெருவில் எறியப்பட்ட 340 கோடி, அதிகாரிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
இரணைமடு விசாரணை அறிக்கையை மறைத்த பெருச்சாளிகள் யார்..? தெருவில் எறியப்பட்ட 340 கோடி, அதிகாரிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்..

2018ம் ஆண்டு இரணைமடு குளத்தின் நீர்மட்டம் உயர்வினால் வடிநிலப்பகுதிகளில் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் அழிவுகளுக்கான காரணம் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டு பிரதம செயலரிடம் கையளிக்கப்பட்ட நிலையில், அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாணத்தின் மிகப்பெரிய குளமான இரணைமடுக்குளம் பெருக்கெடுத்த மையால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களும் 

பயிர்களும் அழிந்து நாசமாயின. உலகவங்கியின் 2000 மில்லியன் ரூபா செலவில் 2018 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீள் புனரமைப்புச் செய்யப்பட்டு விவசாய பயன்பாட்டுக்கு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. 

இவ்வாறு கையளிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த அடைமழை காரணமாக குறித்த குளத்துக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி 

குளத்தின் நீர்மட்டம் 36 அடியை கடந்த நிலையில் மறுநாள் 22ம் திகதியே வான்கதவுகள் திறக்கப்பட்டதாகவும் இதற்கு அதிகாரிகளின் அசமந்தப் போக்கே காரணம் என பாதிக்கப்பட்ட மக்கள் அப்பேது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 

அப்போதைய வட மாகாண ஆளுநராக இருந்த றெஜினோல்ட் கூரே மூவர் அடங்கிய விசாரணை குழு நியமிக்கப்பட்டது. நியமிக்கப்பட்ட குழு தனது ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை ஆளுனர் செயலகத்திடம் கையளித்த நிலையில் வடமாகாண ஆளுனராக பொறுப்பேற்ற கலாநிதி சுரேன் ராகவன் 

காலப்பகுதியில் இறுதி விசாரணைகள் முடிவுற்று அறிக்கை கையளிக்கப்பட்டது. குறித்த அறிக்கையை மூன்று மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் இலங்கை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திடம்கையளிக்கப்பட்ட நிலையில் 

மூன்று மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட விசாரணை அறிக்கை வடமாகாண ஆளுநர் செயலகத்திடம் கையளிக்கப்பட்டது. கையளிக்கப்பட்ட அறிக்கை வடமாகாண ஆளுநர் செயலகம் ஊடாக வடமாகாண பிரதம செயலாளருக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக 

அக்காலப்பகுதியில் ஆளுநர் சுரேன் ராகவன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இவ்வாறு கொடுக்கப்பட்ட அறிக்கைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என இன்றுவரை வெளியிடப்படாத நிலையில் குறித்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

விசாரணை அறிக்கையில் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்த நிலையில் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற சந்தேகம் எழுகின்றது. 

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தவிர்க்க முடியாத ஒத்துழைப்புடன் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றதுடன் குறித்த சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் சிலர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியுடன் 

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க வடமாகாண பிரதம செயலாளருக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தனரா? என்ற சந்தேகம் எழுகின்றது. குறித்த விசாரணை அறிக்கையில் பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் 

அவ்வாறு வெளிச்சத்துக்கு வந்த விடயங்களில் இரணைமடு குளத்துக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தங்குவதற்கான விடுதி குளத்துக்கு அருகில் வழங்கப்பட்ட நிலையில் அவர் தங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும், அவருக்கு சரியான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதில்லை 

என்ற குற்றச்சாட்டுகளும் வெளியாகியுள்ளது .மேலும் அக்காலப்பகுதியில் கிளிநொச்சிப் பிரிவு நீர்ப்பாசப் பொறியியலளராக கடமையாற்றியவர் குறித்த துறையில் ஐந்து வருட கால அனுபவத்தை கொண்டிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்ட நிலையில் 

இவ் அனர்த்தத்தின்போது அரச சொத்துக்கள் மற்றும் பொதுமக்கள் உடமைகளுக்கு சுமார் 340 கோடி மொத்தச் செலவாக கணிப்பிடப்பட்டது. இவ்வாறு பல இழப்பீட்டுக்கு வழி அமைத்த இரணைமடு அனர்த்தத்தின் வெளி வராத விசாரணை அறிக்கை தொடர்பில் அதிகாரிகள் மீது 

பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் விசாரணை அறிக்கை முடிவுற்ற நிலையில் குறித்த விசாரணை அறிக்கையை செயல்படுத்த விடாமல் தடுப்பவர் யார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் வடக்கு மாகாணத்தில் பணியாற்றுகின்ற 

மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவருமே குறித்த விசாரணை அறிக்கையை செயல்படுத்த விடாமல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு