SuperTopAds

4 நிமிடத்தில் ஒருவர் தற்கொலை!! -தமிழகத்தில் ஒரு வருடத்தில் 35,000 பேர்-

ஆசிரியர் - Editor III
4 நிமிடத்தில் ஒருவர் தற்கொலை!! -தமிழகத்தில் ஒரு வருடத்தில் 35,000 பேர்-

தற்கொலையில் தமிழ்நாட்டிற்கு 2-வது இடம்: ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரை மாய்க்கிறார்

இந்தியவில் ஒவ்வொரு 4 நிமிடத்திலும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியிப்பட்டுள்ளது. 

இதன்படி தற்கொலை செய்து கொள்பவர்களின் தொகையில் தமிழ்நாடு 2 ஆவது இடத்தை பிடித்து உள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் மேலும் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விபத்துகள், அதனால் ஏற்படும் மரணங்கள், தற்கொலைகள் குறித்து தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. 

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தற்கொலைகள் குறித்து அந்த அமைப்பு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2019 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இதில் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழ்நாடு 2 ஆவது இடத்திலும் உள்ளது. 

2018 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 516 பேர் தற்கொலை செய்து இருந்தனர். மேலும் 2019 ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 123 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதன்மூலம் தற்கொலையில் 2018 ஆம் ஆண்டை விட 2019 ஆம் ஆண்டு 3.4 சதவீதம் அதிகரித்து உள்ளது.