வெளிநாட்டிலிருந்து அனுப்பபட்ட லட்சக்கணக்கான பணம்..! வர்த்தகர் ஒருவரும், பெண் ஒருவரும் கைது..
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப்பாலை பகுதிகளை சேர்ந்த இருவர் கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிஸ் பிரிவு ஒன்றினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவரும், இரணைப்பாலையை சேர்ந்த பெண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
குறித்த நபர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பெருமளவு பணம் அனுப்பட்டதாகவும் அதனடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் சர்வதேச பொலிஸார் ஊடாக வெளிநாட்டிலிருந்து தவறானவர்கள் ஊடாக தவறான முறையில் சேகரிக்கப்பட்ட பணம் அனுப்பட்டதாக இலங்கை அரசுக்கு தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
புதுக்குடியிருப்பை சேர்ந்த வர்த்தகருக்கு 35 லட்சம் ரூபாய் பணமும், இரணைப்பாலையை சேர்ந்த பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் பணமும் அனுப்பபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் உறுதியான எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.