எச்.வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி!!
உயிரிழந்த வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு தி.நகர் நடேசன் தெருவில் உள்ள வீட்டில் பொதுமக்கள், ஊழியர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10 ஆம் திகதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 6.56 மணியளவில் வசந்தகுமார் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.