SuperTopAds

எஸ்.பி.பி-க்கு பிசியோதெரபி சிகிச்சை!! -சரண் தகவல்-

ஆசிரியர் - Editor III
எஸ்.பி.பி-க்கு பிசியோதெரபி சிகிச்சை!! -சரண் தகவல்-

வைத்தியசாலையில் உள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பிசியோதரபி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அவருடைய மகனான எஸ்.பி.பி சரண் தகவல் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தற்போது சீராக உள்ளது எனவும் அவர் விழிப்புடன் இருக்கிறார். பேசுவதை புரிந்து கொள்கிறார். அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்று மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.

இந்த நிலையில், எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளது எனவும் அவருக்கு  பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்  எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.